வெள்ளி, 6 ஏப்ரல், 2012

நதியென காதல்


நீ என் கற்பனை நதிகளின் கரையில் நிற்பவள்
உன்னை தொட
உன் மேல் விழ
துள்ளி விழுகிறது என் நதியின் அலை
துல்லிய அலையின் ஒரு துளி
உன்னை நனைத்து தன் மேனி குளிர்கிறது
நனைந்த உன் மேனியின் சிலிர்ப்புகளால்
என் நதியில் சுழிகள் உண்டானது
என் நதியின் மூலம் உன் காதல்
உன் வனப்பும் நேசமும்
என் நீர்பிடிப்பு பகுதிகளில் விழுந்த மலை
என் மேல் நீ பொழிந்த மோகம்
என் நதியின் இடையில் பிறந்த அருவி
என் கவிதையின் ஈரம்
உன் முத்தங்களால் உண்டானது
நேர்த்தியான உன் அன்பால்
சலனமற்று பாய்கிறது என் நதி
நதியில் நிதானமாய் மிதந்து செல்கிறது
நம் உறவென்னும் ஓடம்

கருத்துகள் இல்லை: