ஞாயிறு, 26 ஜூலை, 2020

நீ மகரந்தம் நான் மலர்

நீ என் மலரில் நிகழ்ந்த மகரந்த சேர்க்கை
என் வானத்தில் திரண்ட மழை மேகம்
என் வனாந்தரத்தில் விழுந்த மழைத் துளி
என் நிலத்தில் விழுந்த சிறுவிதை
என் மனத்தில் படர்ந்த கனவு
என் மன்னை துளைத்த பசுமரத்து வேர்
 நீ வசந்தம் சுமந்து வந்த காலம்
பசுமை பூசி வந்த வனம்
வளர்பிறையாய் வளரும் என் மோகம்

சனி, 25 ஜூலை, 2020

என்றும் புதியது காதல்

சிரிக்கிறேன் அழுகிறேன்
புரண்டு புரண்டு படுக்கிறேன்
நிலையற்று தவிக்கிறேன்
காலம் கடந்து விட்ட நிலையிலும்
பருவம் தவறிய பொழுதிலும்
இளமையின் இறுதிக் காலத்திலும் காதல் அரும்புகிறது
பதின் பருவத்தின் தவிப்புகளை
வெட்கத்தை, நாணத்தை சுமந்து வருகிறது
என் நாணத்தை கண்டு நானே நாணினாலும்
காதல் அதன் போக்கில் மாறவில்லை
பழைய நிலமானாலும் முளைக்கும் விதை புதிது தானே