செவ்வாய், 20 டிசம்பர், 2016

ஈரம்

உன் வறண்ட உதடுகள் வருடினாலும்
உன் முத்தம் ஈரமே

தித்திப்பு

எத்தனை முறை முத்தமிட்டாலும் முத்தம் பெற்றாலும்
உதடுகளும் உதடுகள்  பதியும் இடங்களும்
ஒன்றாகவே இருந்தாலும்
ஈரமும் ஈர்ப்பும் இனிக்கும் அதன் ரசமும் ஒவ்வொரு முறையும் புதிதாக
தித்திக்கும்

நிலை

நீ நிலமாய் விரிந்தால் நான் மணலாய் படர்கிறேன்
நீ கல்லாய் சமைந்தால் நான் சிலையாய் அமைகிறேன்
நீ விதையாய் விழுந்தால் நான் நிலமாய் சுமக்கிறேன்
நீ நெருப்பாய் கணன்றாள் நான் குளிர் காண்கிறேன்
நீ மரமாய் எழுந்தான் நான் நிழலில் இளைப்பாறுகிறேன்
நீ நதியாய் நடந்தால் என் நிலம் வளமாகிறேன்
நீ மழையாய் பொழிந்தால் என் தாகம் தணிகிறேன்
நீ வெயிலாய் சுட்டாள் என் மேனி காய்கிறேன்
நீ என் நிலை கொண்டாலும் என் நிலை மாறி
 நான் உனை உள்வாங்கிக் கொள்கிறேன்
காதல் மாறாதது காதலால் நான் மாறுகிறேன்

முத்தமிடு

ஆற்றோனா துயரில் நீ அழுகையில்
ஆறுதலாய் நான் அணைக்கும் பொழுது
உன் முகம் என் மார்பில் புதைகையில்
உன் உதடுகள் பதிவதும் முத்தமே

மழலை முத்தம்

அப்பாவிற்கு முத்தம் கொடு என்றவுடன்
தன் பிஞ்சு உதட்டை என் கண்ணத்தில் பதித்த கணத்தில்
இத்தனை காலங்களில் நான் பெற்ற அத்தனை முத்தத்தின் சுகத்தையும்
 உடைத்து நொறுக்கி விட்டது
என் மகனின் ஆசை முத்தம்