ஞாயிறு, 4 அக்டோபர், 2020

தனிமையின் வெம்மை

 நீண்டு கிடக்கும் நாட்கள்

தனிமையின் தாபம் பேசி இன்னும் நீழ்கிறது

நிலையற்று தளும்பும் நீரின் மேற்பரப்பென

நினைவு அலைபாய்கிறது

காற்றின் திசையில் விரையும் சருகென

மனம் உன் திசை பார்த்து தவிக்கிறது

புழுதி படர்ந்த புறவழிச்சாலையென

வெறிச்சோடிக்கிடக்கிறது நீ இல்லாத வீடு 

காட்சி மயக்கமாய் வீடெங்கும் பரவிக் கிடக்கும் காதல் நினைவுகள்

விரகத்தின் தவிப்பை கூட்டுகிறது

நீ இனி போகும் போது என் நினைவையும் கொத்திப் போய்விடு

தனிமையை வலியை சுயநினைவின்றியே கடத்தலாம்

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

காதல் சுமந்து

 உன்னை தீண்ட காத்திருந்தேன்

பின் உன்னை சந்திக்க காத்திருந்தேன்

பின் உன் முகம் பார்க்க காத்திருந்தேன்

இன்று உன்னோடு பேச காத்திருக்கிறேன்

நாளை உன் குருஞ்செய்திக்காக காத்திருக்கும் நிலை வந்தாலும் காத்திருப்பேன்

காதல் சுமந்து

உயிர் சுமந்த கூடு

 என் உயிர் நோகும் என தெரிந்தும்

உள்ளம் நோகும் என தெரிந்தும்

உயிர் இல்லா கூடென என் நிலை மாறும் என தெரிந்தும்

வார்த்தை ஈட்டிகளால்

என் உயிர் வதைத்தல் முறையா

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

காதல் கேடு

 ஆசைப்பட்டு என்ன பயன்

காதல் வளர்த்து என்ன பயன்

கட்டிய கூட்டில் வாழ முடியாத நாய் பிழைப்பு பிளைப்பவனுக்கு

காதலும் ஒரு கேடா

ஞாயிறு, 26 ஜூலை, 2020

நீ மகரந்தம் நான் மலர்

நீ என் மலரில் நிகழ்ந்த மகரந்த சேர்க்கை
என் வானத்தில் திரண்ட மழை மேகம்
என் வனாந்தரத்தில் விழுந்த மழைத் துளி
என் நிலத்தில் விழுந்த சிறுவிதை
என் மனத்தில் படர்ந்த கனவு
என் மன்னை துளைத்த பசுமரத்து வேர்
 நீ வசந்தம் சுமந்து வந்த காலம்
பசுமை பூசி வந்த வனம்
வளர்பிறையாய் வளரும் என் மோகம்

சனி, 25 ஜூலை, 2020

என்றும் புதியது காதல்

சிரிக்கிறேன் அழுகிறேன்
புரண்டு புரண்டு படுக்கிறேன்
நிலையற்று தவிக்கிறேன்
காலம் கடந்து விட்ட நிலையிலும்
பருவம் தவறிய பொழுதிலும்
இளமையின் இறுதிக் காலத்திலும் காதல் அரும்புகிறது
பதின் பருவத்தின் தவிப்புகளை
வெட்கத்தை, நாணத்தை சுமந்து வருகிறது
என் நாணத்தை கண்டு நானே நாணினாலும்
காதல் அதன் போக்கில் மாறவில்லை
பழைய நிலமானாலும் முளைக்கும் விதை புதிது தானே

சனி, 23 மே, 2020

காமம் தராத சுகம்

நீ இதமாய் என்னிடம் பேசினாலே போதும்
உன் இதழ் கடிக்கவும், கட்டி அனைக்கவும் களவி பயிலவும் உள்ள ஆசையை விட
உன்னோடு இதயம் இழக பேசுவதே போதும்
காதல் மொழி களில் இல்லாத களிப்பா காமம் தந்துவிடும்

பசுமை

காய்ந்த வனத்தில்
பசுமை திரும்பிட
 பெய்த மழையென
வரண்ட என் இதயத்தில்
நீ நினைவுகளை கிளறி
பசுமை பூசி விட்டாய்

செவ்வாய், 28 ஜனவரி, 2020

நீ என் கவிதை

உண்மையாக நீ வரும் பொழுதுகளில் மட்டுமே புளர்கிறது புதுக்கவிதை
நீயே என் விடியல்

நீ

விடியல்
அன்பு
காதல்
தெய்வம்
அழகு
அன்பு
கவிதை
குழந்தை
குணம்
இவையாவும் இழையோடும் உணர்வின் பரிமாணமே
இதை உணரவும் உணர்த்தவுமே முடியும்
நீ என்னை உணர வைத்தவள்
நான் அதை
உணர்த்த முயற்சி செய்பவன்

ஜீவன்

நீ இருப்பதாலே
நான் எனும்
ஜீவன் உயிர் வாழ்கிறேன்

சாகாவரம்

நீ
என்னும் சொல்லே
அமுதமடி
அதை உச்சரிக்கும் வரையில்
மரணம் எனக்கு இல்லையடி