வெள்ளி, 6 ஏப்ரல், 2012

புனல்


நீ என் வாழ்வில் சுளித்து ஓடிய நதி
உன் பிரவாகத்தில் நீந்தி திளைத்து என் இளமை
உன் நீரால் தாகம் தணிந்தது என் நிலம்
உன் வளத்தால் செம்மை படர்ந்தது என் இதயம்
உன் நீர் சுளித்து நடந்த சுவடுகள்
என் மேனியெங்கும் நிலைத்து விட்ட வளைவுகள்
உன் உதடுகள் முத்தம் பதித்த இடமெல்லாம்
என் நீர் பிடிப்பு பகுதிகள்
உன் பார்வை பரவும் இடமெல்லாம் என் வனாந்தரம்
நீ தெள்ளியதோர் நீரோட்டம்
நான் நீ பாய்ந்து சென்ற நிலம்

கருத்துகள் இல்லை: