சனி, 31 மார்ச், 2012

நேசத்தின் அடையாளம்!!!


உன் நேசிப்பின் அடையாளமாய் என்னை கொஞ்சுகிறாய்
என்னோடு சண்டை இடுகிறாய்
செல்ல பெயர் வைத்து அழைக்கிறாய்
என்னோடு பொழுதை கழிக்க விரும்புகிறாய்
உன் ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்வையும் என்னோடு பகிர்கிறாய்
நம் இருவரின் ஒரு நாளைய நிகழ்வு அனைத்தையும் இருவரும் அறிந்திருக்க வேண்டும் என நினைக்கிறாய்
சிறு சிறு மறதிகளுக்கு கூட கோபித்து கொள்கிறாய்
சரியான நேரத்தில் உணவு அருந்திநேனா
என்பதில் தொடங்கி
நேற்றைய மழையின் ஜலதோசதிர்க்கு
இன்னும் மருந்து சாப்பிடாதது வரை
நீண்ட உன் கரிசனம் எல்லாம்
உன்னை பொறுத்த வரை காதலின் வெளிப்பாடு
எனக்கோ இது எல்லா வற்றையும் விட முக்கியம்
நான் உன்னுடையவனாக இருப்பது
உன்னுடையவனாக மட்டுமே இருக்கும் ஒழுக்கம்