வெள்ளி, 6 ஏப்ரல், 2012

கர்வம் கொள்!!!

வேறு ஒன்றும் பெரிதாய் வேண்டாம்!
என் கண்களை அடிக்கடி கடந்து போ
உன் வார்த்தைகளை என் காதோரம் கசியவிடு
கரிசனமான உன் அன்பை எனக்காக கொஞ்சம் செலவிடு
என் இதயத்தின் மொழிதல்களை உன் மௌனத்தால் ஆமோதி
உன் பிரிவென்னும் பிரளயத்தை தற்காலிகமாய் சில நேரத்தில் பாய்ச்சு
உன் கோபத்தால் என் இதயத்தை காயப்படுத்து
உன் புன்னகையால் காயங்களுக்கு மருந்து போடு
என்னை கலவையான அனுபவத்தால் தடுமாற செய்
அதனால் பிரவாக மெடுக்கும் என் கவிதைகள்
காரணி நீ என்னும் கர்வம் கொள்!!!

கருத்துகள் இல்லை: