நிலா முற்றம்
நிலா முற்றம் வாழ்கையின் அனுபவ பதிவுகள்
ஞாயிறு, 12 மே, 2024
உயிர்
நீரடித்து நீர் பிரியாது
உயிர் வெடித்து உறவு பிரியாது
உயிராய் கொண்டபின் உறவில் பிரிவேது
உறவில் உனக்கு புரிதல்
இல்லையென்றாலும்
உயிர் என்னைபிரிந்தால் நான் சவமில்லையா
நான் உயிர்த்திருப்பது
உன் உணர்வால்
இல்லையா
சவம்
உறவென்பது காமமல்ல
உணர்வென்பது மோகமல்ல
துனையென்பது உடலல்ல
துஞ்சலென்பது இச்சையல்ல
இடரென்பது பிரிவல்ல
அன்பென்பது இசைவல்ல
காதல் என்பது களவல்ல
உயிர் சுமக்கும் கூடூ
உன்னையும் சுமக்கும்
என்றால்
உயிர் நீ அன்றோ
உணர்வும் நீ அன்றோ
உயிரும் உணர்வும் அற்றுப் போனால்
சவமன்றோ
நீ அற்ற நான் சவமன்றோ
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)