
புதைந்தோ எறிந்தோ நான் சிதைந்து போகும் வரை
சிதையாதிருக்கும்
நான் உன்னை மனதால் காதலித்து
மறுதலித்த நாட்கள்!!!

இளமையில்
பார்வை பரிமாறல்கள்
விழியால் காதல் விருந்து
இதழ்களால் இயலாத மொழிதல்கள்
இமைக்குலிருந்து அழகாய் வந்து செல்லும்
யாருக்கும் புரிவதில்லை
கண் வலி உறவுகளை தவிர
கண் வலி கண்டதெலாம் நினைவுடன் சேரும்போது
எங்கிருந்தோ வருகின்றன அலையா விருந்தாளி கனவுகள்
இப்படியே கவிஞன் ஆகிறான்
காதலன் ஆகிறான் ஆனால்
பணியாய் காதல் காற்றோடு களைய
எங்கோ வேறு யாருடனாவது
மீண்டும் தொடர்கிறது தேடல்
போன முறை அர்த்தம் தெரியாமல்
போன பார்வைகளின் உள்ளர்த்தம் தேடி