வெள்ளி, 21 டிசம்பர், 2012

பெண்ணிற் பெருந்தக்க யாவுள!!!

பெண்ணிற் பெருந்தக்க யாவுள!!!

பெண் உயிர் சுழற்சியின் ஆதாரம்!
பெண்ணுக்கு ஒழுக்கம் வேண்டும்!
உயர்வான சிந்தை வேண்டும்!
சமுக பொறுப்புணர்வு வேண்டும்!
உயர் பிறப்பெனும் கர்வம் வேண்டும்!
அச்சம், மடம், நாணம், பயிற்பென்னும்
குணங்கள் வேண்டும்!
கர்ப்பென்னும் திண்மை வேண்டும்!
காதலிலும், களவியிலும் நெறிகள் வேண்டும்!
ஆண்களை மயக்கும் அழகிலும்
வீழ்த்தும் விழிகளிலும்
கருணையும் காதலும் வேண்டும்!
நீ புண்ணியர்களை உலகிற்கு தறுவிப்பவள்!
மாமனிதர்களை ஏன் தேவமகனையே
உன் சூளில் சுமந்தவள்!
உன் மடியில் தான் தவழ்ந்தார்கள்!
உன் தாலாட்டில் தான் உறங்கினார்கள்!
 நீ சொன்ன கதைகள் கேட்டு தான் கற்பனை வளர்த்தார்கள்!
கீதையை உலகிற்கு உபதேசித்தவனுக்கே
முதல் உபதேசம் செய்தவள் நீ!
நீ பிறவிகளில் எல்லாம் உயர் பிறப்பு!
பூமியின் உயிர் சுழற்சியின் மூல ஆதாரம்!
உன் தோற்றம் வணக்கத்திற்கு உரியது!
உன் காதலால் மானுடத்தை செழிக்கவை!
உன் வசீகரத்தால் ஆண்களை உயர்வடைய செய்!
உன் அவயங்களை மறைத்து உடையணி!
அது உலக இயக்கத்தின் ஆதாரம்!!
உன் வயதை மறைக்கும் படி ஒப்பனை செய்யாதே!
உன்னை விட வயது குறைந்தோருக்கு
நீ வழிகாட்டும்  சகோதரி!
இளையோர்க்கு நீ வணங்கப்பட வேண்டிய தாய்!
உன் வனப்பை வசீகரமாக்கி ஆண்களை வீழ்த்தாதே அவை பூஜிக்க படவேண்டியவை!
தெருவோரம் காட்சிக்கு விற்க்கபடுபவை  அல்ல!
பெண்ணே சாத்தானுக்கும் தேவதைக்கும்
ஒரே சக்தி தான் ஆசிர்வதிப்பதிலும் அழிதொலிப்பதிலும் தான் வித்தியாசம்!
நீ கலாச்சாரத்தில் கால் ஊன்றி
பண்பாட்டால் சமூகத்தை வளப்படுத்து!
காமத்தை தூண்டி கட்டுப்பாடற்று திரிந்து
நாய்களுக்கும் நரிகளுக்கும் இரை ஆகாதே!!
இரை ஆக்காதே!!!