வெள்ளி, 6 ஏப்ரல், 2012

ஞாயிறு!!!

ஞாயிறு போற்றுதும்!
காலை நேரம் கடந்து எழுந்து!
சோம்பலாய் படுக்கையில் புரண்டு
மேல எழுந்து தோட்டத்தை நோட்டம் விட்டு
செல்ல பிராணிகளோடு விளையாடி
அறுசுவை உணவை வயிறு நிறைய தின்று
அம்மாவிடம் நாத்திகம் பேசி
அப்பாவிடம் செலவுக்கு காசு வாங்கி
அக்காவிடம் கடன் கேட்டு நச்சரித்து
ஒன்றிரண்டு தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லி
மாலை நாளைய பயணத்திற்கு தயார் செய்து
அப்பாவிற்கு சட்டை தேய்த்து வைத்து
நீர்த்தொட்டி கழுவி முடித்து
அமைதியாய் மாடியில் உட்கார்ந்து
வானம் பார்க்கும் போதும் கூட
மெல்ல எட்டி பார்க்கும்
மேகத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் நிலவை போல
உள்ளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும்
உன் நினைவின் சுவடுகள்

கருத்துகள் இல்லை: