காதல் கவிதைகளை வாசித்து முடிக்கையில்
ஒளிந்து கொண்டு சிரிக்கிறாய்
உன் உருவம் தெரிவதில்லை
உன் சிரிப்பொலி மட்டும் இதயத்தில் எதிரொலிக்கிறது!!!
ஒவ்வொரு காதல் கதையையும் வாசித்து முடிக்கையில்
ஒரு முறை தலை காட்டி மரிகிறாய்
முகம் பிடிபடவில்லை
மங்கலாய் உன் உருவம் மட்டும் இதயத்தில் உறைகிறது!!!
ஒவ்வொரு காவியத்திலும்
உயர்ந்து நிற்கும் பெண்களில் இருந்து
உன்னை நான் என் இதயத்தில் உருவாக்கினேன்!!!
உன் வருகைக்கு பின் தான்
எனக்குள் கவிதைகள் ஊற்றெடுத்தன!
உன் வரவிற்கு பின் தான்
இதயத்தில் அழகியல் ரசனைகள் உருவாகியது!!!
கண்களுக்கு புலப்படாமல்!
கனவுகளிலும் அகப்படாமல்!
உணர்வுகளால் உருவானவள் நீ!!!
உனக்காக எழுத தொடங்கித்தான்
என் கை பட்ட தாள்களில்
எல்லாம் கவிதைகள் முளைத்தன!
உனக்காக எழுதிவை தான்
படித்தும் ரசித்தும் கிழித்தும் எறியப்பட்ட கவிதைகள்!!!
உன்னை காதலிக்க தொடங்கித்தான்
பெண்மையை மதிக்க கற்றுகொண்டேன்!
எனக்குள் இருக்கும் நீ மாசற்றவள்
உன் வருகையை எதிர்நோக்கியே
ஓவ்வொரு நாளும் ஒழுக்கம் கடைபிடிக்கிறேன்!!!
உன்னை அடையாளம் காணவே
ஒவ்வொரு பெண்ணிடமும்
என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன்!!!
மழையை எதிர் நோக்கும் பயிர்கள்
பனியை மட்டும் பெற்று கருகுவது போலவே
உன்னை அறியாத கண்கள்
சில பெண்களிடம் அகப்பட்டு
இதயத்தை ரணமாக்கி கொள்ளும்!!!
நீ என்று எண்ணி உறவாடித்தான்
நான் இங்கு சில பெண்களிடம் சிக்கிக்கொண்டு
ஒட்டுமொத்தமாய் உன்னையும் சேர்த்து
மறக்க சில நேரங்களில் தலைப்படுகிறேன்!!!
இதயம் மட்டும் இருப்பு கொள்ளாமல்
இன்னமும் கடந்து போகும்
பெண்களில் எல்லாம்
உன்னை தேடி கொண்டிருக்கிறது!!!