
கண்மணிக்கு
கண்ணாய் என் கருத்தாய்
காதலாய் கனவாய்
சுவாசம் நிறை காற்றாய்
சுகமாய் சுமக்கின்ற வழியாய்
நிரம்பி வழிகிறாய்
ஞாபக கின்னங்களில்
வழிகிற துளிகளில் என்
நினைவும் கலைகிறது
வெறுமைக்குள் வெடிக்கும்
இதயத்தின் ஏக்க தணலில்
வேகுமா என் இன்றைய உணவிற்கான உலை
வெறுமைக்கும் வறுமைக்கும் இடையிலான
உரையாடல்களை ஒதுக்கி விட்டு
ஒடுங்கிய உடலில் வற்றி போய்விட்ட
நரம்புகளின் தளர்ச்சியையும் மீறி
நாடி துடிக்கிறது கண்கள் நிலைகுத்தி
மூச்சு அடங்கும் வேலைக்குள்
உன் முந்தானை காற்றில்
ஒரு மூச்சு வாங்கிவிடலாம் என்று