சனி, 3 செப்டம்பர், 2011

வெட்கப்பட்டாள் எது காதல்!


எத்தனை முறை சண்டை போட்டு கொண்டாலும்
எத்தனை முறை மோதி கொண்டாலும்
சில நாள் கோபங்களில் சந்திப்பை தவிர்த்தாலும்
யாரவது ஒருவரின் ஒற்றை வார்த்தை
குசலம் விசாரிப்பில்
மறைந்து போய் விடுகிறது
பொய் கோபமும் வைராக்கியமும்
மோகம் கொள்ள மட்டுமல்ல கோபம் கொள்ளவும்
ஏன் சண்டை போடவும் கூட
நமக்கு வெட்கம் இல்லை
வெட்கப்பட்டாள் ஏது காதல்

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

நான்கு சுவர் எல்லை.!!!


இவர்களை தெரியுமா?
நான் இவர்களை உங்களுக்கு அறிமுக படுத்தி வைக்கிறேன்!
நான், நீங்கள் ஏன் நாம் எல்லோருமே ஒன்று தான்
ஆம் நான்கு சுவர் எல்லைக்குள் சிக்குண்டவர்கள்
தன்னை சுற்றி தாமே எழுப்பிக்கொண்ட
நான்கு சுவர்களுக்குள் சிக்குண்ட மனிதர்கள்
நான்கு சுவர் ஆக்கிரமிப்புகளுக்குள்
அடைபட்ட பகுதி தான்
இவர்களின் உண்மையான உலகம்
அந்த சுவர்களுக்குள்
சிறைப்பட்டு கிடப்பது தான்
இவர்களின் வாழ்க்கை
ஜனனமும், மரணமும், ஊடலும், கூடலும்,
இருப்பும், வெறுப்பும், செழுமையும், வறுமையும்
எல்லாம்அந்த நான்கு சுவர்களுக்குள்ளாகவே
இடையில் சிறு சிறு பிரிதல்கள் என்றாலும்
வேறு இடத்திலும்
நான்கு சுவர்களுக்குள் தான்
அடைபட்டுகிடக்கிறார்கள்
அவரவர் தகுதிகளுக்கேற்ப
சுற்று சுவர்களை விரிவுப்படுத்தி கொள்கிறார்கள்
பெரிய மனிதர்கள்
தங்கள் சுவற்றுக்கு இடைப்பட்ட பகுதியை
பெரிதாக வைத்திருகிறார்கள்
சிறிய மனிதர்கள்
சிறிய இடத்தை சுற்றி சுவர் எழுப்புகிறார்கள்
மனிதன் உலகத்தில் தனக்கென்று இடம் தேடுவதே
தன்னை சுற்றி சுவர் எழுப்ப தான்
சுவற்றுக்கு மேலே கூரை
சுவரை காத்துக்கொள்ள
சுவற்றுக்கு வெளியே
சுவரோ வேலியோ எழுப்புகிறார்கள்
மேற்கூரையும் அப்படிதான்
மச்சியோ, குச்சியோ, ஓடோ
அவரவர் தகுதிக்கேற்ப
தங்களை நம்பாமல் சுவற்றை நம்பி வாழ்கிறார்கள்
தங்கள் சுவற்றுக்குள் அடுத்தவரை அனுமதிப்பதில்லை
தங்களோடு ஐக்கியப்பட்டவரை
தங்கள் சுவர்களுக்குள் அடைத்துக்கொல்கிறார்கள்
இவர்களின் உயரத்தையும் கூறையே தீர்மானிக்கிறது
இவர்களுக்கு வானம் என்பது
நிலவுக்கும், நட்சத்திரங்களுக்கும்,
மேகங்களுக்கும், சூரியனுக்கும் உரியது
எப்பொழுதாவது வானத்தை பற்றி
வார்த்தை கோர்வையாக ஒரு பாடல் வரும்
அதை கேட்டு ரசிக்க ஒரு கூட்டம் வரும்
இந்த சுவற்றுக்கு மத்தியில் சுற்றி கொண்டிருப்பவர்களுக்கு
சுவற்றை பிரிந்தவன் பிச்சைகாரன்
சுவற்றுக்குள்ளாகவே
சிதைந்து கொண்டிருப்பவன் நடைபிணம்
ஏன் சுவர்களே இல்லாத நடைபாதை வாசிக்கு மட்டும் என்ன
உலகம் விரிந்தா கிடக்கிறது
மதில் சுவருக்கும் சாலைக்கும்
இடைப்பட்ட பகுதி தான் அவனது உலகம்
சுவருகளை துறந்து
எல்லைகளை கடக்க வேண்டிய
துறவிகளே மடாதிபதிகளாக
சுவர் எழுப்பி கொண்டு வாழும்போது
ஏன் தெய்வத்தை கூட
கருவறைக்குள் கட்டிப்போட்டு விட்டோம்
இங்கே சுவர் இல்லாமல்
வெட்டவெளியில் தெய்வம் இருப்பது கூட
சுவர் எழுப்ப ஆள் இல்லாததால் தான்
சுவர்களுக்குள் பதுங்குகிறார்கள்
சுவர்களுக்குள் பதுக்குகிறார்கள்
ஒருவரது பதுக்கலை
இன்னொருவன் பறித்துக்கொண்டால்
வேறொரு சுவற்றுக்குள் காவல்துறை காத்திருக்கிறது
வேறொரு சுவற்றுக்குள் நீதி மன்றம் கூடுகிறது
பறித்தவனை வேறொரு சுவற்றுக்குள் சிறை வைக்கிறது
இந்த சுவர்களுக்குள் சிறு சிறு பேதங்கள் தான்
சில திறந்திருக்கும்
சில ஜன்னல்களோடு இருக்கும்
சில எப்பொழுதும் அடைபட்டு கிடக்கும்
சுவற்றுக்குள் வாழ்வதில் ஒன்றிரண்டு வெளி உலக தொடர்புகளுக்கான
திறப்புகளும் உண்டு
ஜன்னலும் வாசலுமாய் ஆனால்
அவைகளும் கதவுகளோடும் தால்பால்களோடும் இருக்கும்
நம்மால் எப்போதும் கதவுகளை திறக்க முடியாவிட்டாலும்
ஜன்னல்களையாவது திறந்து வைப்போம்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

வெட்கம்


உன்னோடு காதலை சொன்ன பொழுதிலும் வெட்கப்பட்டாய்
பின் கை கோர்த்து நடக்கலாம் என்றேன் வெட்கப்பட்டாய்
கோவிலில் பேசவும், கடற்கரையில் சந்திக்கவும்,
ஏன் என் கண்கள் பார்த்து பேச கூட வெட்கப்பட்டாய்
வெட்கத்தோடு சந்தித்தோம்
வெட்கத்தோடு பிரிந்தோம்
என் மீதான காதலும், உன் வெட்கமும்
உன்னை விட்டு பிரியாதிருந்தது
முதன் முதலாய் அரிதானதொரு சமயத்தில்
முத்தங்கள் கேட்டேன் தயங்கி, தயங்கி
முத்தமிட்டாய் நானும் முதன் முதலாய்
உன்னோடு சேர்ந்து வெட்கப்பட்டேன்!!!

திங்கள், 25 ஜூலை, 2011

என் காதலி!!!


காதல் கவிதைகளை வாசித்து முடிக்கையில்
ஒளிந்து கொண்டு சிரிக்கிறாய்
உன் உருவம் தெரிவதில்லை
உன் சிரிப்பொலி மட்டும் இதயத்தில் எதிரொலிக்கிறது!!!
ஒவ்வொரு காதல் கதையையும் வாசித்து முடிக்கையில்
ஒரு முறை தலை காட்டி மரிகிறாய்
முகம் பிடிபடவில்லை
மங்கலாய் உன் உருவம் மட்டும் இதயத்தில் உறைகிறது!!!
ஒவ்வொரு காவியத்திலும்
உயர்ந்து நிற்கும் பெண்களில் இருந்து
உன்னை நான் என் இதயத்தில் உருவாக்கினேன்!!!
உன் வருகைக்கு பின் தான்
எனக்குள் கவிதைகள் ஊற்றெடுத்தன!
உன் வரவிற்கு பின் தான்
இதயத்தில் அழகியல் ரசனைகள் உருவாகியது!!!
கண்களுக்கு புலப்படாமல்!
கனவுகளிலும் அகப்படாமல்!
உணர்வுகளால் உருவானவள் நீ!!!
உனக்காக எழுத தொடங்கித்தான்
என் கை பட்ட தாள்களில்
எல்லாம் கவிதைகள் முளைத்தன!
உனக்காக எழுதிவை தான்
படித்தும் ரசித்தும் கிழித்தும் எறியப்பட்ட கவிதைகள்!!!
உன்னை காதலிக்க தொடங்கித்தான்
பெண்மையை மதிக்க கற்றுகொண்டேன்!
எனக்குள் இருக்கும் நீ மாசற்றவள்
உன் வருகையை எதிர்நோக்கியே
ஓவ்வொரு நாளும் ஒழுக்கம் கடைபிடிக்கிறேன்!!!
உன்னை அடையாளம் காணவே
ஒவ்வொரு பெண்ணிடமும்
என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன்!!!
மழையை எதிர் நோக்கும் பயிர்கள்
பனியை மட்டும் பெற்று கருகுவது போலவே
உன்னை அறியாத கண்கள்
சில பெண்களிடம் அகப்பட்டு
இதயத்தை ரணமாக்கி கொள்ளும்!!!
நீ என்று எண்ணி உறவாடித்தான்
நான் இங்கு சில பெண்களிடம் சிக்கிக்கொண்டு
ஒட்டுமொத்தமாய் உன்னையும் சேர்த்து
மறக்க சில நேரங்களில் தலைப்படுகிறேன்!!!
இதயம் மட்டும் இருப்பு கொள்ளாமல்
இன்னமும் கடந்து போகும்
பெண்களில் எல்லாம்
உன்னை தேடி கொண்டிருக்கிறது!!!

சனி, 7 மே, 2011

சந்தர்பம்


உணர்வுகள் எப்போதும் என் உடன் இருக்கும்

அதன் வெளிப்பாட்டை காலமும் சந்தர்பமும் நிர்ணயிக்கும்

அக்கறை!!!


உன் மீதான என் அன்பிற்க்கு வரையறை இல்லை
அதை வெளிபடுத்தும் முறைகளிலும் நான் அப்படியே
ஆனால் சம்பிரதாய தினசரி கொஞ்சல்களும்! கெஞ்சல்களும்!!
உப்பு சப்பற்ற வெற்று அக்கறையும்!!
தான் உண்மையான காதல்!!! என்று உறுவாக்கியவற்கும்
அதை அப்படியே நம்பும் உனக்கும்
எப்படி விளங்க வைப்பேன்
என்னுள் நிறைந்திருக்கும்
உண்மையான காதலை!!!

மாறுபாடு!!!


உன் மீதான ஈர்ப்பும், நேசமும், காதலும்
கணம் குறையாமல்
எப்போதும் போல் நீடித்திருக்கிறது
வெளிபடுத்தும் கணங்களும்! விதங்களுமே!!
மாறுபடுகின்றன!!!

புதன், 5 ஜனவரி, 2011

தொழில்நுட்பமும் காதலும்!!!


இரவு முழுவதும் உன்னோடு செல்லிட பேசியில்
கதைத்ததில் செவிகள் சூடாகும்!
விரல்கள் நோக குறுஞ்செய்தி அனுப்பியதில்
விரல்கள் மட்டும் இன்றி கண்களும் நோகும்!!
அடிகடி பரிமாறும் மின் அஞ்சல்களும்
நேரம் போவது தெரியாமல் தொடரும்
மின் அஞ்சல் அரட்டைகளால்
கண்களோடு சேர்ந்து முதுகும் வலிக்கும்!!
வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில்
உன் காதலால் என் இதயம் மட்டும் யன்றி
இன்ன பிற அவயங்களும் பாதிக்க பட்டுள்ளன!!!