திங்கள், 29 நவம்பர், 2010

நான்!!!

நான் ஒரு நதி
ஓடிகொண்டே உள்ளேன்
நற்பாதை தான்
என் வலி என்று கொண்டால்
நான் ஓடி புவியில்
பயன் ஒன்றும் இல்லை
தரிசை பசுமையாக்கி
உழவனுக்கு பரிசாய் தருவேன்
நன்றி இருந்தால்
என் பாதையை செப்பனிடுவான்
இல்லாதவன் என்னை தனதாக்கி
கொள்ள பார்ப்பான்
யாருக்கும் அடங்குவதில்லை நான்
யாருக்கும் புரிவதில்லை
அணை கொண்டு
என்னை அடக்கிட துணிந்தால்
முட்டி நான் பார்பேன்
முடியாது போனால்
மூழ்கடித்து போவேன்
நான் ஒரு நதி ஓடிகொண்டே உள்ளேன்
நற்பாதை தான் என் வலி என்று கொண்டால்
நான் ஓடி புவியில் பயன் ஒன்றும் இல்லை

திங்கள், 22 நவம்பர், 2010


உனக்கு கவிதை எழுத தெரியுமா என்றாய்
அதற்காகவே சிரத்தையாய் கிறுக்கினேன்
நன்று என்றாய் இன்னும் சிரத்தையாய் கிறுக்கினேன்
இன்று இன்னும் சிலரும் என் கிறுக்கல்களை ரசிக்கிறார்கள்

காதலின் வெளிப்பாடு


உன்னிடம் காதலை வெளிப்படுத்தும் முன்பே
உன்னை நான் காதலிக்க தொடங்கிவிட்டேன்
உன்னை நான் காதலிக்க தொடங்கும் முன்பே
என் இதயம் உன்னை காதலிக்க தொடங்கிவிட்டது
மனதின் வெளிப்பாடு தானே செயல்

சனி, 20 நவம்பர், 2010

அன்பின் வெளிப்பாடு


கன்னத்தில் முத்தமிட்டால் காதல்
நெற்றியில் முத்தமிட்டால் ஆசி
உதட்டில் முத்தமிட்டால் காமம்
என் கண்களில் முத்தமிட்டு
நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாயே
அன்பின் வெளிப்பாடுகள்
எப்போதும் வரைமுரைகளுள் வருவதில்லை

முத்தமா உன் தர்க்கமா


வாதம் தடித்து
வரம்புகள் தாண்டி
வசைகள் தொடங்கும் நிலையில்
உன் தர்க்கத்தை முடிக்கும் உபாயங்கள்
தோல்வியுறும்  வேலையில்
உன் உதடுகள்
வார்த்தைகள் உதிர்க்காதிருக்க
என் உதட்டால் கவ்வி பிடிக்கிறேன்
வாதங்கள் ஓய்ந்து
காதல் அரும்பும் வேலையில்
என்னிடம் விளங்காது நிற்கிறது ஒரு கேள்வி
வென்றது என் முத்தமா உன் தர்க்கமா

வெள்ளி, 19 நவம்பர், 2010

இயல்பு


உன் மீதான என் காதலுக்கு காரணங்கள் கேட்கிறாய்
ஆணின் மீது பெண்ணும்
பெண்ணின் மீது ஆணும்
காதல் கொள்வது தானே இயல்பு
இயல்புக்கு ஏதடி காரணங்கள்?

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

காதல்


காதல் ஒருமுறை தான் வரும் என்ற இலக்கிய வாதங்கள்
ஏன் எனக்கு பொருந்துவதில்லை
ஒரு வேலை அது ஒரு பெண்ணின் மீது ஒரு முறை தான் வரும் என்பதாக இருக்குமோ

நானும் நீயும்


உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்றாய்
என்னை எனக்கு எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு

கண்களும்!! காதலும்!!!


உன்னிடம் காதல் வெளிபடுத்தும் தருணங்கள்
வாய்க்கும் போதெலாம் நானே தவிர்க்கிறேன்
நமக்குள் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால்
நம் இருவர் கண்களை தவிர எல்லா கண்களுக்கும்
ஏதோ ஒன்று நம்மிடையே உறுத்தி கொண்டு தெரியும்
நமக்குள் பிடிக்கவில்லை என்றாலோ நம் இருவர் கண்களும்
ஒன்றை ஒன்று
சந்திப்பை வெறுத்து விலகும்
இதற்கு
சொல்லாமலே இருந்து விடலாம்

அழகான காதலோடும் சுகமான வலிகளோடும்

என் காதல்


இயைந்து,
கெஞ்சி,
மன்றாடி,
அழுது பெறுவதற்கு
என் காதல் ஒன்றும்!!
உன் எச்சில் பிச்சை இல்லையடி!!!