திங்கள், 25 ஆகஸ்ட், 2008

தூரம்


தூர இருக்கும் இடம்
மிக அழகாய் தான் இருக்கும்
நெருங்கி சென்று பார்த்தால் சில வேலை
சலிப்பு மட்டுமே மிஞ்சும் அதனால் தான் நீ என்
அருகில் இருந்தாலும் என் காதல் மட்டும்
தூரமாகவே நிற்கிறது மிகவும் அழகாக

தனிமை


நான் மட்டும் இருப்பதில்லை தனிமை
எனக்கு
நீ அற்று இருப்பது தான்

கனவுகள்


கருவறை தூக்கத்திற்கும்

கல்லறை தூக்கத்திற்கும் இடையில்

விழிப்பில் கூடத்தான் எத்தனை கனவுகள்