புதன், 18 மே, 2022

காதல்

என் வார்த்தைகள் கொண்டு சொல்லாத போதிலும்
என் பார்வைகள் அர்த்தம் உனக்கு புரியாத போதிலும்
சுற்றம் பேசும் கேலிகள் உன்னை சேராத போதிலும்
என் இதயத்தின் தூது உன்னை வந்து சேராது போகினும்
என் நடத்தைகள் உன்னை ஈர்க்காது போயினும்
என் கவிதையின் காரணம் நீ அறியாது கடந்தாகினும்
என் சுற்றத்தின் உன் மீதான கரிசனம் 
நீ கவனிக்கத் தவறினும்
என் காதலை நீ உணரவே இல்லாத மோதிலும்
கடலில் விழும் மலையென என் உணர்வுகள் குணம் மாறினும்
உயிரின் வலியை உணராத நிலையிலும்
வற்றாது காதல்
வாழாத நிலையிலும்
வீழாது காதல்

கருத்துகள் இல்லை: