சனி, 17 நவம்பர், 2018

துணை

ஜீவநதி பாயும் நிலத்திற்க்கும்
மழை வேண்டும்
வானம் பார்த்த பூமிக்கும்
மழை வேண்டும்
நீர் நிறை கடலுக்கும்
மழை வேண்டும்
மணலாய் பரவும் பாலைக்கும்
மழை வேண்டும்
குன்றாய் உயர்ந்த மலைக்கும்
மழை வேண்டும்
வானம் கீழ் விரிந்த அனைத்து
பகுதிகளும் உயிர்த்திருக்க மழை வேண்டும்
அது போல் மானிடர் யாவற்க்கும்
காதல் வேண்டும் களவி வேண்டும் அன்பை பறிமாற ஆள் வேண்டும் 

கருத்துகள் இல்லை: